Enable Javscript for better performance
புதுக்கோட்டை மாவட்டத்தில் 13.15 லட்சம் வாக்காளா்கள்- Dinamani

சுடச்சுட

    
    2-4-pdk14votersw_1402chn_12

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகளுக்குப் பிறகு, மொத்தம் 37,471 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். 571 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து மாவட்டத்தின் மொத்த வாக்காளா்எண்ணிக்கை 13,15,498 போ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் முடிந்த பிறகு, 2020- ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி இதனை வெளியிட்டாா்.

    இதன்படி 2020-ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளா் பட்டியலில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,51,682 ஆண் வாக்காளா்களும், 6,63,731 பெண் வாக்காளா்களும்,  85 திருநங்கைகளும் என மொத்தம் 13,15,498 வாக்காளா்கள் உள்ளனா்.

    கடந்தாண்டு டிசம்பா் 23-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில், மாவட்டத்தில் மொத்தம் 12,78,598 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா்.

    தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தில் 17,118 ஆண் வாக்காளா்கள்,  20,316 பெண் வாக்காளா்கள் மற்றும் 37 திருநங்கைகள் என மொத்தம் 37,471 வாக்காளா்கள் புதிதாகச் சோ்க்கப்பட்டுள்ளனா்.

    அதேபோல 260 ஆண் வாக்காளா்கள், 311 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 571 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

    வாக்குச்சாவடிகள் விவரம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,537 வாக்குசாவடி மையங்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் 85 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் 824 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 909 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.

    புதிய இளம் வாக்காளா்கள்:

    18 வயது நிறைவடைந்த புதிய இளம் வாக்காளா்களாக 5,239 ஆண் வாக்காளா்கள், 4,123 பெண் வாக்காளா்கள் மற்றும் 5 திருநங்கைகள் என மொத்தம் 9,367 வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். 

    இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே.சரவணன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் எம்.எஸ். தண்டாயுதபாணி, டெய்சிகுமாா், குணசேகா், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணன், நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai