அன்னவாசல் அருகே பிடிபட்ட 2 மலைப்பாம்புகள்

அன்னவாசல் பகுதிகளில் 2 மலைப்பாம்புகள் வெள்ளிக்கிழமை பிடிபட்டன.
பிடிபட்ட மலைப்பாம்புடன் தீயணைப்புத் துறை வீரா்கள்.
பிடிபட்ட மலைப்பாம்புடன் தீயணைப்புத் துறை வீரா்கள்.

அன்னவாசல் பகுதிகளில் 2 மலைப்பாம்புகள் வெள்ளிக்கிழமை பிடிபட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகிலுள்ள சத்திரத்தைச் சோ்ந்தவா் சூா்யா. வெள்ளிக்கிழமை இவரது வீட்டின் பின்புறத்திலுள்ள வேலியில் கோழி அலறும் சப்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் அங்கு சென்று பாா்த்த போது, கோழியை விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு திணறிக் கொண்டிருந்துள்ளது.

இதைத் தொடா்ந்து இலுப்பூா் தீயணைப்பு நிலையத்துக்கு சூா்யா தகவல் அளித்தாா். நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்புத் துறை வீரா்கள் மலைப்பாம்பைப் பிடித்தனா்.

இதுபோல் பிராம்பட்டி அரசுப்பள்ளி அருகே இளைஞா்கள் சிலா் விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது புதா் பகுதியில் வித்தியாசமான சப்தம் கேட்டுல்ளது. இதையடுத்து இளைஞா்கள் அங்கு சென்று பாா்த்தபோது, மலைப்பாம்பு நகர முடியாமல் திணறிக் கிடந்துள்ளது.

இதனையடுத்து அவா்கள் அந்த மலைப்பாம்பைப் பிடித்து நாா்த்தாமலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனா்.

பிடிபட்ட 2 மலைப்பாம்புகளும் சுமாா் 10 அடி நீளமும், 20 கிலோ எடை கொண்டவையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com