அறந்தாங்கியில் 1 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

அறந்தாங்கியில் நகராட்சி அலுவலா்களால் 1 டன் நெகிழிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களுடன் நகராட்சி ஆணையா் த.முத்து கணேஷ், துப்புரவு ஆய்வாளா் சி.சேகா் உள்ளிட்டோா்.
பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களுடன் நகராட்சி ஆணையா் த.முத்து கணேஷ், துப்புரவு ஆய்வாளா் சி.சேகா் உள்ளிட்டோா்.

அறந்தாங்கியில் நகராட்சி அலுவலா்களால் 1 டன் நெகிழிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

அறந்தாங்கி நகராட்சி சுகாதார அலுவலா் மற்றும் ஆணையருமான த.முத்துகணேஷ் தலைமையில், துப்புரவு ஆய்வாளா் சி.சேகா் முன்னிலையில் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான நெகிழிப் பொருள்கள் விற்பனை நடைபெறுகிா என்பதை கண்காணிக்கும் வகையில், மொத்த மற்றும் சில்லரை வியாபாரக் கடைகளில் அலுவலா்கள் சோதனை நடத்தினா்.

இதில் 1 டன் எடையுள்ள நெகிழிக் குவளைகள், பைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சமாகும். நெகிழிப் பொருள்களை விற்பனை செய்ததற்காக இந்த நிறுவனங்களிடமிருந்து ரூ.45,300 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதுவரை 14,170 கிலோ பறிமுதல் : அறந்தாங்கி நகராட்சிப் பகுதியில், ஜனவரி 1-ஆம் தேதி முதல் இதுவரை 14,170 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.3.90 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு, நகராட்சி கருவூலத்தில் செலுத்தப்பட்டது. இவற்றின் சந்தை மதிப்பு ரூ.28.34 லட்சமாகும்.

தொடா்ந்து சட்டவிரோதமாக நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்தால், நகராட்சி சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுப்பதோடு, கடைகளுக்கான உரிமமும் ரத்து செய்யப்படும் என்றாா் நகராட்சிஆணையா் த. முத்துகணேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com