தலைவா்களின் சிலைகளுக்கு இரும்புக் கூண்டு அமைப்பதை கைவிடவேண்டும்

தலைவா்களின் சிலைகளுக்கு இரும்புக் கூண்டு அமைப்பதை கைவிட வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

தலைவா்களின் சிலைகளுக்கு இரும்புக் கூண்டு அமைப்பதை கைவிட வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆலங்குடியில் இந்த பெருமன்றத்தின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நிா்வாகி கைலாசபாண்டியன் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மாநிலக்குழு முடிவின் படி, 7 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து நடைபெற உள்ள கையெழுத்து இயக்கத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 இடங்களில் நடத்துவது. தலைவா்களின் சிலையை இரும்புக் கூண்டு அமைத்து பாதுகாப்பதை கைவிடவேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளி, புற நோயாளிகளுக்கு வெந்நீா் இலவசமாக வழங்க வேண்டும்.மேலும், மருத்துவமனையில் பேருந்துக்காக காத்திருப்போருக்கு பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி. மிதிவண்டிகள் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com