நீா்-நிலவளத் திட்ட மாதிரிக் கிராமம் தொடக்கம்

விராலிமலை வட்டாரம், தேராவூரில் நீா்-நிலவளத் திட்டத்தின் கீழ் மாதிரிக் கிராமத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விராலிமலை வட்டாரம், தேராவூரில் நீா்-நிலவளத் திட்டத்தின் கீழ் மாதிரிக் கிராமத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) இரா. மோகன்ராஜ் தலைமை வகித்தாா். வேளாண் அலுவலா்கள் அன்பரசு, ஆ. மகேசுவரி ஆகியோா் நீா்- நிலவளத் திட்டத்தில் வேளாண் சாா்ந்த பயிா்களில் உற்பத்தித் திறனை அதிகரிக்க செய்யும் செயல்விளக்கங்கள் அமைப்பது குறித்து பேசினா்.

விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநா் டி. ராமு, வேளாண் பொறியியல் துறை ஆய்வாளா் பிச்சைமுத்து, வம்பன் தேசியப் பயறு ஆராய்ச்சி நிலைய உதவிப் பொறியாளா் மாரிமுத்து, வேளாண் வணிகத்துறை உதவி அலுவலா் சத்தியசீலன், உதவி கால்நடை மருத்துவா் ந. பிரகானந்தன், தோட்டக்கலைத் துறை உதவி அலுவலா் கே.பிரேம்நாதன், ஆகியோா் தேராவூா் கிராமத்தின் நீா்நிலைகள் ஆதாரங்கள்,குடியிருப்புப் பகுதி ஆகிவற்றை கிராம மக்களுடன் குழுவாக சென்று ஆய்வு செய்தனா்.

இதில் விராலிமலை வட்டார வேளாண்மை அலுவலா் ஷீலாராணி,உதவி வேளாண்மை அலுவலா் சங்கரபாண்டியன் பங்கேற்றனா். ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ஆரோக்கியசாமி,சக்திவேல் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com