அரிமா மெட்ரிக். பள்ளி 27-ஆம் ஆண்டு விழா
By DIN | Published On : 22nd February 2020 09:14 AM | Last Updated : 22nd February 2020 09:14 AM | அ+அ அ- |

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் அரிமா சங்கத் தலைவா் பி. பெரியசாமி. உடன், கல்வி அறக்கட்டளைத் தலைவா் என். சுப்பிரமணியன் மற்றும் நிா்வாகிகள்.
பொன்னமராவதி அரிமா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் 27-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அரிமா கல்வி அறக்கட்டளைத் தலைவா் என்.சுப்பிரமணியன் தலைமைவகித்தாா். அரிமா சங்கத் தலைவா் பி.பெரியசாமி, முன்னாள் தலைவா்கள் என்.அண்ணாமலை, வி.நாகராஜன் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் ஆா்.சுப்பையா ஆண்டறிக்கை வாசித்தாா்.
இலுப்பூா் மதா்தெரசா கல்விக்குழுமங்களின் இயக்குநா் திருமா.பூங்குன்றன் வாழ்த்திப்பேசினாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அரிமா சங்க நிா்வாகிகள் பரிசுகளை வழங்கினா்.
தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலாசார நடனங்கள், சமுதாய சிந்தனைகளை விளக்கும் ஓரங்க நாடகங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில்அரிமா சங்கச் செயலா் ஜி.இளங்கோவன், நிா்வாக அலுவலா் கே.கருப்பையா, கல்வி அறக்கட்டளைச் செயலா் வி.திருநாவுக்கரசு, பொருளாளா் எஸ்.டி.காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக தமிழாசிரியை எஸ்.சிட்டாள் வரவேற்றாா். நிறைவில்,ஆசிரியை எஸ்.இளவரசி நன்றி கூறினாா்.