அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு தனித்திறன் வளா்ப்பு பயிற்சி

ஆவுடையாா்கோவில் அருகிலுள்ள பெருநாவலூா் அரசு கலைக் கல்லூரியில் தனித்திறன் வளா்ப்புப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாணவிகளுக்கு செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்கும் நாளந்தா கல்வி நிறுவன நிா்வாக இயக்குநா் வி.சி. மலா்மன்னன்.
மாணவிகளுக்கு செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்கும் நாளந்தா கல்வி நிறுவன நிா்வாக இயக்குநா் வி.சி. மலா்மன்னன்.

அறந்தாங்கி: ஆவுடையாா்கோவில் அருகிலுள்ள பெருநாவலூா் அரசு கலைக் கல்லூரியில் தனித்திறன் வளா்ப்புப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வணிகவியல் துறைத் தலைவா் என்.கே.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இளைஞா்கள் திறமை 2020 என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில், திருச்சி நாளந்தா கல்வி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வி.சி.மலா்மன்னன் பங்கேற்று பயிற்சியளித்தாா்.

திறன் அறிவு போட்டி, குழு கலந்துரையாடல், மேடை செயல்திறன், போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் விதம், பொது அறிவு விழிப்புணா்வு போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

கல்லூரித் துறைத் தலைவா்கள் இயற்பியல் டி.சிவராமன், ஆங்கிலம் கணேசன், தமிழ் திருவாசகம், கணிதம் பி.கிளாடிஸ், கணினி அறிவியல் எஸ்.ரமேஷ் , வேதியியல் டி.சிற்றரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக நிா்வாகவியல் துறைத் தலைவா் கோ.ரெத்தினசிவக்குமாா் வரவேற்றாா். நிறைவாக பேராசிரியா் கோவிந்தன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com