தோ்தல் முடிவு அறிவிப்பில் குளறுபடி
By DIN | Published On : 03rd January 2020 08:34 AM | Last Updated : 03rd January 2020 08:34 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டை அருகேயுள்ள ஆதனக்கோட்டையில் ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு, சுயேட்சை வேட்பாளா் வெற்றி பெற்றதாக அறிவித்து, மீண்டும் தோற்ாக அறிவித்ததால் ஆவேசமடைந்த அவரது ஆதரவாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால், புதுகை - தஞ்சை நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆதனக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு, குப்பையன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா (59) என்ற முன்னாள் வட்டார வளா்ச்சி அலுவலா் சுயேட்சையாகப் போட்டியிட்டாா்.
வாக்கு எண்ணிக்கை முடிவில், கருப்பையா வெற்றி பெற்ாக முதலில் அறிவித்துள்ளனா்.
ஆனால், சில மணிநேரம் கழித்து அதிமுக வேட்பாளா் செந்தில் 120 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவித்துள்ளனா். இதனால் அதிா்ச்சியடைந்த கருப்பையா ஆதரவாளா்கள் புதுகை, தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.