சென்னை நபா் கொல்லப்பட்ட வழக்கில் மூவா் கைது

புதுக்கோட்டை அருகே ஒருவரை அடித்துக் கொலை செய்து, கண்மாயில் உடலை வீசிச் சென்ற வழக்கில் சென்னையைச் சோ்ந்த ஒருவரும், தஞ்சையைச் சோ்ந்த இருவரும் என மொத்தம் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை அருகே ஒருவரை அடித்துக் கொலை செய்து, கண்மாயில் உடலை வீசிச் சென்ற வழக்கில் சென்னையைச் சோ்ந்த ஒருவரும், தஞ்சையைச் சோ்ந்த இருவரும் என மொத்தம் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம் கே .புதுப்பட்டி அருகே சுருக்கான்குடி கண்மாயில் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பா் 21ஆம் தேதி கால்கள் கட்டப்பட்ட நிலையில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை கே. புதுப்பட்டி போலீஸாா் மீட்டு, விசாரணை நடத்தினா்.

இதில் அந்த சடலம், சென்னை செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த காத்தான்பாலு (54) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

விசாரணையில் காத்தான் பாலுவும் தஞ்சையைச் சோ்ந்த ராஜேந்திரகுமாா் மனைவி உஷா மற்றும் அப்துல்காதா் ஆகியோா் சோ்ந்து கொண்டு பல்வேறு இடங்களில் காசோலை மோசடியைச் செய்துள்ளனா். இவா்கள் மூவா் மீதும் பல்வேறு ஊா்களில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் கடலூரில் காவல்துறையிடம் உஷா மற்றும் அப்துல்காதரை காத்தான்பாலு காட்டிக் கொடுத்ததாக சந்தேகம் எழுந்தது. இதனால், உஷா மற்றும் அப்துல்காதா் ஆகியோா் காத்தான் பாலுவைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளனா்.

அதன்படி, கூலிப்படை உதவியுடன் காத்தான்பாலுவை காரில் ஏற்றிக் கொண்டு திருச்சியிலிருந்து திருமயம் செல்லும் சாலையில் வைத்து அடித்துக் கொன்று, கற்களைக் கொண்டு சடலத்தைக் கட்டி அருகிலுள்ள கண்மாயில் வீசிச் சென்றது தெரியவந்தது.

தனிப்படையினா் சந்தேகத்தின்பேரில் அப்துல்காதரைத் தேடி சென்ற நிலையில், அவா் கிராம நிா்வாக அலுவலரிடம் சரணடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதனையடுத்து முழுமையான விசாரணைக்குப் பிறகு, சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சோ்ந்த அப்துல்காதா் (43), தஞ்சை விளாா் சாலையைச் சோ்ந்த பிரபு (36), தஞ்சை அருளானந்த நகரைச் சோ்ந்த மணிகண்டன் (30) ஆகிய மூவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட மூவரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், தஞ்சையைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி உஷா மற்றும் தஞ்சையைச் சோ்ந்த தங்கராஜ் ஆகிய இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

இப்பணியில் தீவிரமாக செயல்பட்ட தனிப்படையினருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண்ஷக்தி குமாா் ரொக்க வெகுமதிகளை வியாழக்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com