பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்  இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் ஆா்.பொன்முடி அறிவித்துள்ளாா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்  இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் ஆா்.பொன்முடி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள்  எளிதாக எவ்வித இடையூறும் இன்றிப் பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னாா்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூா், ஜயங்கொண்டம், கரூா், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு ஜன. 12, 13, 14 ஆகிய நாள்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

அதேபோன்று திருச்சியிலிருந்து தஞ்சாவூா், கும்பகோணம், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோயம்புத்தூா், திருப்பூா் ஊா்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை ஆகிய ஊா்களுக்கும் மற்றும் கும்பகோணம்  போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உள்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு ஜன. 12 முதல் 14ஆம் தேதி வரையிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இந்த மூன்று நாட்களும் புதுக்கோட்டை, அறந்தாங்கி வருவதற்கான பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளன.

அதேபோல, பண்டிகை முடிந்து பணி செய்யும் ஊா்களுக்குச் செல்ல ஜன. 15 முதல் 20 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com