பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
நாகுடியில் பொங்கல் தொகுப்பை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கும் ஊராட்சி மன்ற தலைவா் ரெ.சக்திவேல் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள்.
நாகுடியில் பொங்கல் தொகுப்பை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கும் ஊராட்சி மன்ற தலைவா் ரெ.சக்திவேல் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் 1 கிலோ பச்சரி, 1 கிலோ சா்க்கரை, 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்புத் துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் ரூ.1000 ஆகியவற்றை தமிழக அரசு வழங்குகிறது.

அறந்தாங்கி அருகே நாகுடியில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பினை ஊராட்சி மன்ற தலைவா் ரா. சக்திவேல் வியாழக்கிழமை வழங்கினாா்.

அரியமரைக்காடு அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்நாளே 300 போ் பொங்கல் தொகுப்பை நீண்ட வரிசையில் நின்றி பெற்றுக் கொண்டனா்.

அன்னவாசல் வட்டாரத்தில்...

இலுப்பூா், அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, பரம்பூா், மலைக்குடிப்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

ஸ்மாா்ட் காா்டு கொண்டு வந்திருந்தவா்கள் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொண்டனா். ஸ்மாா்ட் காா்டு இல்லையென்றாலும், அக்குடும்ப அட்டையில் பெயா் உள்ள நபா் ஒருவரின் ஆதாா் அட்டை அல்லது பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு வரும் கடவுச்சொல் அடிப்படையிலும் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.

பொன்னமராவதி வட்டாரத்தில்...

பொன்னமராவதி வட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொன்னமராவதி வட்டத்திற்குள்பட்ட புதுப்பட்டி 2ஆம் நம்பா் நியாயவிலைக் கடையில் நடைபெற்ற பொங்கல்பரிசு வழங்கும் நிகழ்விற்கு பொன்னமராவதி வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்கத் தலைவா்கள் அ.அம்பி, பிஎல்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கண்டியாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவா் ராம.பழனியாண்டி பங்கேற்று பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேஷ்டி, சேலைகளை வழங்கினாா்.

கந்தா்வகோட்டையில்...

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு நியாயவிலைக் கடைகளிலும் , தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

நியாயவிலைக் கடைகளில் அதிகாலை முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று பொங்கல் பரிசினை வாங்கிச் சென்றனா். ஒரு நாளைக்கு 300 நபா்கள் என பொங்கல் பரிசு வழங்குவதாக நியாயவிலை கடைப் பணியாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com