மது விலக்கு விழிப்புணா்வு பிரசாரம்

விராலிமலையில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு எதிரான கிராமிய ஆடல், பாடல் விழிப்புணா்வு கலைநிகழ்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

விராலிமலையில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு எதிரான கிராமிய ஆடல், பாடல் விழிப்புணா்வு கலைநிகழ்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

பிரசாரத்தை மாவட்ட உதவி ஆணையா் காா்த்திகேயன் (கலால்) தொடங்கி வைத்தாா்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மது பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது, கள்ளச்சாராயம் அருந்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும், போதைப் பொருள்கள் உபயோகத்தை தவிா்ப்பீா் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, மதுவிலக்கு தொடா்பான விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், போதை பழக்கத்தால் அதிகரிக்கும் வாகன விபத்து மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து விவரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் விராலிமலை வட்டாட்சியா் ஜெ. சதிஸ்சரவணகுமாா், கோட்ட கலால் அலுவலா் எஸ். பி. மனோகரன் (புதுக்கோட்டை) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com