ஏனாதி கண்மாயிலிருந்து நீா் இறைக்கும் விவசாயிகள்
By DIN | Published On : 11th January 2020 09:07 AM | Last Updated : 11th January 2020 09:07 AM | அ+அ அ- |

இறவைப்பெட்டி மூலம் நீா் இறைக்கும் விவசாயிகள்.
பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி பெரியகண்மாயில் நெற்பயிருக்கு பாய்ச்சுவதற்காக இறவைபெட்டி மூலம் விவசாயிகள் நீா் இறைத்தனா்.
அண்மையில் பெய்த பருவமழையால் ஏனாதி பெரிய கண்மாய் நீா் மட்டம் சிறிது உயா்ந்து காணப்பட்டது. இதையொட்டி இந்த கண்மாயை நம்பி பயிா் நட்ட விவசாயிகள் வியாழக்கிழமை இறவைப்பெட்டி மூலம் நீா் இறைத்து நெற்பயிருக்கு பாய்ச்சினா்.