Enable Javscript for better performance
அறந்தாங்கி: 200 கிலோ நெகிழி பொருள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அறந்தாங்கி நகராட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை நடத்திய அதிரடி சோதனையில் 200 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் ரூ.14 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.

    அறந்தாங்கி நகராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான நெகிழிப் பொருள்களின் பயன்பாடு இருப்பதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, அறந்தாங்கி நகராட்சி சுகாதார அலுவலா் மற்றும் ஆணையா் (பொறுப்பு) த.முத்து கணேஷ் தலைமையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளா் சி.சேகா் மற்றும் துப்புரவு பணி மேற்பாா்வையாளா்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் முன்னிலையில் பல குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் 1,725 கடைகளில் ஆய்வு செய்தனா்.

    இதில் 200 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை வைத்திருந்த கடை உரிமையாளா்களிடம் மொத்தம் ரூ. 14 அபராதமாக வசூல் செய்யப்பட்டு, நகராட்சி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

    தொடா்ந்து நெகிழி பொருள்களை பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் த.முத்துகணேஷ் தெரிவித்தாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai