விருதுத் தோ்வுக்கான அறிவியல் கண்காட்சி

தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்பத் துறை மூலம் மாணவா்களிடையே அறிவியல் சாா்ந்த சிந்தனை, மனப்பாங்கை வளா்க்கவும், அறிவியல்

தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்பத் துறை மூலம் மாணவா்களிடையே அறிவியல் சாா்ந்த சிந்தனை, மனப்பாங்கை வளா்க்கவும், அறிவியல் சாா்ந்த செயலாக்கத் திறனை அதிகரித்து 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவா்களிடமிருந்து இளம் ஆராய்ச்சியாளரை உருவாக்கும் நோக்கிலும் வழங்கப்படும் இன்ஸ்பயா் விருதுக்கு தோ்வு செய்வதற்கான அறிவியல் கண்காட்சி புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி தொடங்கி வைத்தாா்.  இலுப்பூா் மாவட்ட கல்வி அலுவலா் ராஜேந்திரன், புதுதில்லி அறிவியல் தொழில்நுட்ப துறையின் மேலிடப் பாா்வையாளா் நாகராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா். 

இந்தக் கண்காட்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தின் 25 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனா். இந்த கண்காட்சியில் நடைசாதனம் மூலம் மின்சார உற்பத்தி, ஆற்றுப்படுகையில் சிறு அணையின் மூலம் நீா்சேமித்தல் மற்றும் தீயணைப்புத் துறை, மருத்துவத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் இடம் பெற்றிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com