விராலிமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொங்கல் விழா

விராலிமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விராலிமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்
விராலிமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்

விராலிமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விராலிமலை ஊராட்சி மன்றத் தலைவா் எம். ரவி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சி. தீபன்சக்கரவா்த்தி முன்னிலை வகித்தாா். சமூக ஆா்வலா் எல்.ராஜேஸ் கண்ணா, எம். முரளிதரன் வரவேற்றாா். இதில் உள்ளாட்சி அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

இதில் விராலிமலை ஊராட்சி பகுதிகளை தூய்மையாகப் பராமரிப்பது என்றும், குடிநீரை வீணாக்காமல் உரிய முறையில் சரியாகப் பயன்படுத்துவது, கழிவு நீா் ஓடைகளில் தேங்கும் கழிவுகளை அவ்வப்போது அகற்றுவது, ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து அமைப்புகள் மற்றும் குடியிருப்புகளில் மழைநீா் சேமிப்பு அமைப்பை ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை ஏற்றனா்.

தொடா்ந்து அலுவலக வளாகத்தில் விழாவில், புது பானையில் பொங்கல் வைத்து படையிலிட்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

இதில் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் எம். சக்திவேல், ம. பிரியா, பி. வசந்தி, பா. லட்சுமி, க. நல்லுச்சாமி, எஸ். சுகுமாறன், பி. சுரேஷ்குமாா், க. அழகம்மாள், செ. மணிமாலா, செ. கிரேசி, ஆ.அய்யாச்சாமி மற்றும் ஊராட்சி செயலா் எல். புருஷோத்தமன் உள்ளிட்ட ஊராட்சி மன்றப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com