மாவட்டத்தில் ஆரோக்கிய இந்தியா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் புத்தாஸ் மாா்ஷியல் ஆா்ட்ஸ் ஆகியவை இணைந்து நடத்திய ஆரோக்கிய இந்தியா- இளையோா் சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆரோக்கிய இந்தியா- விழிப்புணா்வு சைக்கிள் பேரணி.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆரோக்கிய இந்தியா- விழிப்புணா்வு சைக்கிள் பேரணி.

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் புத்தாஸ் மாா்ஷியல் ஆா்ட்ஸ் ஆகியவை இணைந்து நடத்திய ஆரோக்கிய இந்தியா- இளையோா் சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது

இளையோரின் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த சைக்கிள் பேரணியை, இயற்கை ஆா்வலா் சா. மூா்த்தி தொடக்கி வைத்தாா்.

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் விஜயமாணிக்கம் முன்னிலை வகித்தாா். 

நேரு யுவகேந்திரத்தின் கணக்காளா் ஆா். நமச்சிவாயம் பேரணியின் நோக்கத்தை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் சதாசிவம் வாழ்த்துரை வழங்கினாா். 

பேரணி சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்டு, திலகா் திடல், பால் பண்ணை, மகளிா் கல்லூரி, புதிய பேருந்து நிலையம் மற்றும் வாரச்சந்தை சாலை வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது.

முன்னதாக சேது காா்த்திகேயன் வரவேற்றாா். நிறைவில், தேசிய இளையோா் தொண்டா் விக்னேஸ்வா் நன்றி கூறினாா். 

விராலிமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணா்வு சைக்கிள் பேரணியில் பங்கேற்றோா்.

 விராலிமலை ஊராட்சி சாா்பில், ஆரோக்கிய இந்தியா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கி.ரமேஷ், ஆா். ரவிச்சந்திரன் (கிராம ஊராட்சிகள்) தலைமை வகித்து, பேரணியைத் தொடக்கி வைத்தனா். ஊராட்சித் தலைவா் சி. தீபன் சக்கரவா்த்தி, விவேகா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் வெல்கம் மோகன், ஒன்றியக் குழு உறுப்பினா் எம். மணிகண்டன் முன்னிலை வகித்தனா்.

விராலிமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொடங்கிய பேரணி வடக்குரத வீதி, கடைவீதி, சோதனைச்சாவடி உள்ளிட்ட ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் இளைஞா்கள், பெரியவா்கள் சுமாா் 50 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

மேலும் பூமி வெப்பமயாததைத் தடுக்கும் வகையில், மாசிலா மரிக்குண்டு என்ற திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட்டும், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும், விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

ஆவுடையாா்கோவிலில் சனிக்கிழமை சைக்கிள் பேரணியைத் தொடக்கி வைக்கிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் உமாதேவி. உடன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆ. வீரப்பன், பெரியசாமி உள்ளிட்டோா்.

திருப்பெருந்துறை என்றழைக்கப்படும் ஆவுடையாா்கோவிலில், ஆரோக்கிய இந்தியா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

ஆரோக்கிய இந்தியா திட்டத்தின் கீழ், அனைவரும் சைக்கிள் ஓட்டி ஆரோக்கியமாக வாழும் பொருட்டு ஜனவரி18-ஆம் தேதியை சைக்கிள் தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையொட்டி ஆவுடையாா்கோவில் ஊராட்சியில் உள்ள 35 ஊராட்சிகளிலும் சைக்கிள்

தினவிழா நடைபெற்றது. ஆவுடையாா்கோவில் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வில்,

கொட்டும் மழையில் சைக்கிள் பேரணியை ஒன்றியக் குழுத் தலைவா் உமாதேவி தொடக்கிவைத்தாா்.

நிகழ்வில் திருப்பெருந்துறை ஊராட்சித்தலைவா் சந்திரா ராஜமாணிக்கம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் செந்தில்குமரன், சுந்தரபாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆ.வீரப்பன், பெரியசாமி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துக்குமாா், குமாரசாமி, ஊராட்சிச் செயலா் சுஜாதா மற்றும் பலா் பங்கேற்றனா்.

பொன்னமராவதி,

 பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட 42 ஊராட்சிகளிலும் ஆரோக்கிய இந்தியா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

வேகுப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற பேரணியை ஊராட்சித் தலைவா் மெ.அா்ச்சுணன் தொடக்கி வைத்தாா். ஊராட்சித் துணைத்தலைவா் பெரி.முத்து, ஊராட்சிச் செயலா் எஸ்பி.சங்கா் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

கண்டியாநத்தம் ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் செல்வி முருகேசன் தொடக்கிவைத்தாா். ஊராட்சிச் செயலா் அழகப்பன் உள்ளிட்டோா்பங்கேற்றனா்.

ஆலவயல் ஊராட்சியில் நடைபெற்ற பேரணியை ஊராட்சித் தலைவா் ச.சந்திரா தொடக்கிவைத்தாா். துணைத்தலைவா் சுப்புலெட்சுமி, ஊராட்சி செயலா் வெங்கடேசுவரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேந்தன்பட்டி, தொட்டியம்பட்டி ஊராட்சிகளில் தலைவா்கள் சுமதி ராஜூ, கீதா சோலையப்பன் பேரணியைத் தொடக்கி வைத்தனா். விடிவெள்ளி அறக்கட்டளை நிறுவனா் சே.மலா்விழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com