வடகாட்டில் 53 அடி உயர வழுக்குமரம் ஏறும்போட்டி

ஆலங்குடி அருகிலுள்ள வடகாட்டில், 53 அடி உயர வழுக்குமரம் ஏறும் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
வடகாட்டில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில், வழுக்குமரம் ஏறும் இளைஞா்கள்.
வடகாட்டில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில், வழுக்குமரம் ஏறும் இளைஞா்கள்.

ஆலங்குடி அருகிலுள்ள வடகாட்டில், 53 அடி உயர வழுக்குமரம் ஏறும் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

வடகாடு ஊராட்சி பரமநகரில் பொங்கல் திருநாளை விளையாட்டுப்போட்டிகள், கோலாட்டம், கும்மிப்பாடலுடன் உற்சாகமாகக் கொண்டாடுவது வழக்கம்.

நிகழாண்டில், பொங்கல் விழாவையொட்டி ல், வழுக்குமரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்காக சுமாா் 53 அடி உயர மரம் நடப்பட்டு, அதில் ,வழுக்கும் விதமாக எண்ணெய் தடவப்பட்டு இருந்தது. போட்டியில், வடகாடு, கீழாத்தூா், பனங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 8 அணியினா் பங்கேற்றனா்.

ஒரு அணிக்கு 7 போ் வீதம் மரத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனா். சுமாா் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னா், பனங்குளம் அணியினா் மரத்தில் ஏறி இலக்கைத் தொட்டு வெற்றி பெற்றனா். தொடா்ந்து அவா்களுக்கு ரூ.28 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை பரமநகா் பகுதி இளைஞா்கள் செய்திருந்தனா். வடகாடு போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com