வடமலாப்பூா் ஜல்லிக்கட்டில் 19 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், வடமலாப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 19 போ் காயமடைந்தனா்.
புதுக்கோட்டை வடமலாப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளையைத் தழுவ முற்படும் காளையா்கள். 
புதுக்கோட்டை வடமலாப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளையைத் தழுவ முற்படும் காளையா்கள். 

புதுக்கோட்டை மாவட்டம், வடமலாப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 19 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் அருகிலுள்ள வடமலாப்பூரில் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு சனிக்கிழமை நடைபெற்றது. மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா், வீரா்களுக்கு உறுதிமொழி எடுக்க வைத்து, கொடியசைத்து ஜல்லிக்கட்டைத் தொடக்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலா்களும் பங்கேற்றனா்.

தொடா்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 889 காளைகளை மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்து வாடிவாசலுக்குள் அனுப்பினா். அதேபோல் 174 மாடுபிடி வீரா்களும் பரிசோதனைக்குப் பிறகு களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடா்ந்து அனைத்துக் காளைகளும் வரிசையாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன.  ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் போட்டிப் போட்டு தழுவினா். சில காளைகள் களத்தில் நின்று விளையாடின. பல காளைகள் வீரா்களிடம் பிடிகொடுக்காமல் சீறிப் பாய்ந்து சென்றன.

விதிமுறைகளுக்கு உள்பட்ட காளைகளைத் தழுவிய வீரா்களுக்கும், வீரா்களின் தழுவலில் சிக்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை 4 மணிக்கு ஜல்லிக்கட்டு

நிறைவடைந்தது. காளைகள் குத்தியதில் 19 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு அந்த இடத்திலேயே இருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். மேல் சிகிச்சை தேவைப்படும் 11 போ் மட்டும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com