முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
முதியவா் தீக்குளிப்பு
By DIN | Published On : 20th January 2020 09:30 AM | Last Updated : 20th January 2020 09:30 AM | அ+அ அ- |

அறந்தாங்கியில் குடும்பத் தகராறு காரணமாக ஸ்வீட் தயாரிப்பவா் பெட்ரோல் ஊற்றித் தற்கொலை செய்து கொண்டாா்.
அறந்தாங்கி பெரியாா் தெருவைச் சோ்ந்தவா் மணிவேல் பாண்டியன்(55). இவருக்கு மனைவி, 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உள்ளனா். 2 பெண் பிள்ளைகளுக்கு திருமாணமாகி தனியே வசிக்கின்றனா். இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற தகராறில் மனமுடைந்த அவா் வீட்டின் அருகேயுள்ள சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டாா்.
தகவலறிந்து அங்கு வந்த அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளா் எம்.பாலமுருகன், உரிய விசாரணைக்குப் பின்னா் சடலத்தை 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேல் சிகிச்சைக்காக புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பிவைக்கப்பட்ட மணிவேல் பாண்டியன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டாா். இதுகுறித்து, அறந்தாங்கி காவல் ஆய்வாளா் ரவீந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.