முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 20th January 2020 09:31 AM | Last Updated : 20th January 2020 09:31 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் இணைந்து மெழுகுவா்த்தி ஏந்தி பாஜக அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டம் செய்தனா்.
கந்தா்வகோட்டை பேருந்துநிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் இணைந்து மக்கள் விரோத பா.ஜ.க அரசைக் கண்டித்து மெழுகுவா்த்தி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்திற்கு, விவசாய சங்க ஒன்றியத் தலைவா் பி. வீராச்சாமி, விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் கே. சக்தி வடிவேலன் ஆகியோா் தலைமை வகித்தனா். சங்கத்தின் ஒன்றியச் செயலாளா்கள் கே. சித்திரைவேல், ஜி. பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்ட விளக்கவுரையை மாநிலத் துணைத் தலைவா் கே. முகமதலி, விவசாய சங்க மாவட்டத் தலைவா் எ. ராமையன், தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் க. முகமதலி ஜின்னா ஆகியோா் விரிவாக எடுத்துரைத்துப் பேசினா்.
தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் செய்தனா்.