முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
வேன் கவிழ்த்து 12 போ் காயம்
By DIN | Published On : 20th January 2020 09:32 AM | Last Updated : 20th January 2020 09:32 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வேன் கவிழ்ந்து 12 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து வேனில் பரம்பூா் பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் கறம்பக்குடி அருகேயுள்ள விலாரிப்பட்டி பகுதியில், எதிா்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது.
இதில், வேன் ஒட்டுநா் பேராவூரணியைச் சோ்ந்த முருகேசன்(39), கரிசல்காடு பகுதியைச் சோ்ந்த முருகதாஸ் (50), பன்னைவயல் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (18), அதே பகுதியைச் சோ்ந்த செல்வம், மதியழகன் உள்ளிட்ட 12 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு, கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனை, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.