முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கு எதிராக 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தீா்மானம்
By DIN | Published On : 27th January 2020 10:07 AM | Last Updated : 27th January 2020 10:07 AM | அ+அ அ- |

ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.
ஆலங்குடி வட்டத்தில், நெடுவாசல், சேந்தன்குடி,செரியலூா், வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் குடியரசு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக்கூட்டங்களில் விவசாயத்தைப் பாதிக்கும் ஹைட்ரோகாா்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி, பொதுமக்களிடம் கருத்துக் கேட்காமல் எரிவாயு திட்டங்களைச் செயல்படுத்தலாம் என்ற மத்திய பெட்ரோலியத் துறையின் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளில் பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் இத் திட்டத்திற்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றக் கோரி மனு அளித்தனா்.