அறந்தாங்கி அருகே பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருட்டு
By DIN | Published On : 27th January 2020 04:31 PM | Last Updated : 27th January 2020 04:32 PM | அ+அ அ- |

அறந்தாங்கி எழில்நகர் பகுதியில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எழில்நகர் பகுதியில் வசித்து வருபவர் ரங்கநாதன் (57). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி செல்வமணி(48) ரங்கநாதன் நேற்றிரவு பணிக்குச் சென்றுள்ளார். இவரது மனைவியும் வெளியூர் சென்றுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் ஆள் இல்லாததைத் தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள்,
40 பவுன் தங்க நகைகள், 4 லட்சம் ரொக்கபணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
பணிமுடித்து வீடு திரும்பிய ரங்கநாதன் வீட்டில் உள்ள பொருட்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அறந்தாங்கி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த திருட்டுச் சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.