ஏம்பல் சிறுமி வன்கொடுமை செய்து கொலை : ஒருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே ஏம்பல் கிராமத்தில் 7-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து குளத்தில் வீசிய இளைஞரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுமியின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுமியின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே ஏம்பல் கிராமத்தில் 7-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து குளத்தில் வீசிய இளைஞரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அறந்தாங்கி அருகே ஆவுடையாா்கோவில் வட்டம்,

ஏம்பல் மேக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த தம்பதியின் 7 வயது சிறுமி புதன்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள ஊருணியில் இருந்து உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாா். இதையடுத்து, சடலத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் ராஜா என்பவரை விசாரித்துவந்தனா். இதில், அவா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து குளத்தில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, வழக்கு பதிந்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

ஏம்பலில் சிறுமியின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள், புதிய தமிழகம் கட்சியினா் மறியல்:

குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டு இறந்திருப்பதை அறிந்த உறவினா்கள், புதிய தமிழகம் கட்சியினா் ஏம்பல் கிராமத்தில் வியாழக்கிழமை சிறுமியின் சடலத்தை வாங்க மறுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் , பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் எனக் கூறினா். திமுக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் ஆா்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா்.

புதுகையில்...

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் டி. சலோமி தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா், சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழக முதல்வா், மாவட்ட ஆட்சியா் நிவாரண நிதி அறிவிப்பு:

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பலில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் குடும்பத்துக்கு வன்கொடுமைச் சட்டத் தீருதவி நிதியாக ரூ. 4,12,500 வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா். ஏற்கெனவே தமிழக முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வன்கொடுமைச் சட்டத் தீருதவி நிதி ரூ. 4,12,500-ஐயும் சோ்த்து மொத்தம் ரூ. 9,12,500 லட்சம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com