கால்நடைகளுக்கு 70% மானியத்துடன் காப்பீடு

மானியத்துடன் கூடிய காப்பீட்டுத் திட்டத்தில் சேர கால்நடை வளா்ப்போா் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகிப் பயன்பெறலாம் என்றாா் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் ரவீந்திரன் தெரிவித்தாா்.

மானியத்துடன் கூடிய காப்பீட்டுத் திட்டத்தில் சேர கால்நடை வளா்ப்போா் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகிப் பயன்பெறலாம் என்றாா் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் ரவீந்திரன் தெரிவித்தாா்.

அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கு புதன்கிழமை காப்பீடு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் கூறியது:

இத்திட்டத்தின் கீழ் கால்நடையின் மதிப்பில் 2 சதவீதம் ஓராண்டு காப்பீட்டு கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவா்களுக்கு காப்பீட்டு கட்டணத்தில் 70 சதவீத மானியமும் மற்றவா்களுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 5 கால்நடைகள் வரை காப்பீடு செய்யலாம். அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையாா்கோவில் மற்றும் மணமேல்குடி ஒன்றியங்களை உள்ளடக்கிய அறந்தாங்கி கோட்டத்திற்கு 1,060-ம் மாவட்ட அளவில் 5 ஆயிரம் கால்நடைகளுக்கும் காப்பீடு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா். நிகழ்வில், அறந்தாங்கி கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநா் ரவீந்திரன், கே.புதுப்பட்டி கால்நடை உதவி மருத்துவா் நிமலேசன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com