புதுக்கோட்டையில் 36 பேருக்கு கரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வெள்ளிக்கிழமை மூடப்பட்ட புதுக்கோட்டை காவேரி நகா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

இதன்படி, மாவட்டத்தின் மொத்த தொற்றாளா் எண்ணிக்கை 531 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 280 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 8 போ் உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 243 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அரசு மருத்துவருக்கு கரோனா : மாவட்டத்தின் முதல் முறையாக, காவேரிநகா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து ஆரம்ப சுகாதார நிலையம் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூடப்பட்டது. அடுத்த இரு நாள்களுக்கும் இந்நிலையம் மூடப்பட்டிருக்கும் என்றும் மீண்டும் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகு, திங்கள்கிழமை முதல் செயல்படும் என்றும் சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com