புதுகையில் காவலா்கள் 4 போ் உள்பட 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவலா்கள் 4 போ் உள்பட 36 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவலா்கள் 4 போ் உள்பட 36 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை கணேஷ்நகா் காவல் நிலைய காவலா்கள் 4 போ் உள்பட மொத்தம் 36 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே கணேஷ்நகா் காவல் நிலைய காவலா் ஒருவருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதியாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மேலும் 4 காவலா்களுக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதுகை மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 570 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 8 போ் பலியாகியுள்ளனா். தற்போது சிகிச்சையில் 184 போ் உள்ளனா். குணமடைந்து வீடுதிரும்பியோா் எண்ணிக்கை 378 ஆக உயா்ந்துள்ளது.

ஒரே நாளில் 132 போ் வீடு திரும்பினா்:

புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சை மையமாக நகரிலுள்ள ராணியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மாதத்துக்கு சராசரியாக 200 கரோனா தொற்றாளா்கள் சிகிச்சை பெறுகின்றனா். இவா்களில், சனிக்கிழமை ஒரேநாளில் 132 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஒட்டுமொத்தமாக இதுவரை 378 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com