முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
சிபிஎம், வர்த்தக சங்கம் எதிர்ப்பு: கரோனா பாதித்த 18 பேர் புதுக்கோட்டை மருத்துவமனைக்கு மாற்றம்
By DIN | Published On : 14th July 2020 01:49 PM | Last Updated : 14th July 2020 01:49 PM | அ+அ அ- |

எதிர்ப்பு கிளம்பியதைத்தொடர்ந்து புதிதாக கரோனா பாதித்த 18 பேர் அறந்தாங்கி மருத்துவமனையில் இருந்து புதுக்கோட்டை மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கரோனாத் தொற்று அதிகமானதையடுத்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று அறந்தாங்கியிலும் தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் தொற்று ஏற்ப்பட்டு பாதிப்படைந்தவர்களை மாவட்டத் தலைநகரமான புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதே போன்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத் தலைநகர் மருத்துவமனைக்கே கொண்டு சென்றனர். இந்நிலையில் திங்கள் அன்று புதிதாக பாதிக்கப்பட்ட 18 பேரை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு அருகே உள்ள கட்டடத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனையறிந்த மார்க்சிஸ்ட் கட்சியினர், வர்த்தகசங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தற்போது ஏற்ப்படுத்தப்பட்டுள்ள கரோனா வார்டிற்க்கும் மகப்பேரு மருத்துவமனைக்கும் 10 மீட்டர் இடைவெளியே உள்ளது, இதனால் அங்கே பிரசவிக்கப்பட்டுள்ள 150,க்கும் மேற்ப்பட்ட பச்சிளங்குழந்தைகள் மற்றும் கர்பிணி பெண்கள்பாதிக்கப்படும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளதாகக் கூறி சிபிஎம் மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமையில், வர்த்தக சங்க தலைவர் வரதராஜன்மற்றும் சங்க நிர்வாகிகள், மனிதேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முபாரக்அலி, மனித நேயமக்கள்கட்சி மாவட்ட செயலாளர் கிரீன் முகம்மது ஆகியோர் மருத்துவமனையை முற்றுகையிட முயன்றனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த வந்த மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரகபணிகள்துறை டாக்டர், மலர்விழி, கோட்டாட்சியர் கிருஷ்ணன், காவல்துணைகண் காணிப்பாளர்பாலமுருகன், வட்டாச்சியர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அனுமதிக்கப்பட்ட 18 பேரை உடனடியாக புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர் மீண்டும் இது மாதிரியான சம்பவம் நடந்தால் மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று சிபிஎம் மாவட்ட செயலாளர் கவிவர்மன் தெரிவித்தார்