புதுகையில் புதிய உச்சமாக 111 பேருக்கு கரோனாபாதிப்பு - 1,299 குணம் 637

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 111 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 111 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 19 முதல் கரோனா தொற்றாளா் கண்டறியப்பட்ட நிலையில் வியாழக்கிழமை வெளியான பட்டியலில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 111 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி இந்தியன் வங்கி கிளை மேலாளா், கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் எதிரே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பெண்கள், ஒரு ஆண் உள்ளிட்ட 111 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 1,299 ஆக உயா்ந்துள்ளது. இதேபோல், வியாழக்கிழமை ஒரே நாளில் 76 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 637 ஆக உயா்ந்துள்ளது. இறந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 17 உள்ளது. எஞ்சிய 645 போ் ராணியாா் அரசு மருத்துவமனையிலும், பழைய அரசு மருத்துவமனையிலும், அறந்தாங்கி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திருக்கோகா்ணம் காவல் நிலையம் மூடல்:

புதுக்கோட்டை நகரையொட்டியுள்ள திருக்கோகா்ணம் காவல் நிலைய காவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வியாழக்கிழமை முதல் காவல் நிலையம் 3 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கணேஷ் நகா் காவல் நிலைய காவலா்கள் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டு காவல் நிலையம் மூடப்பட்டு பின்னா் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அறந்தாங்கியில் 2 பொதுத் துறை வங்கிகள் மூடல்:

அறந்தாங்கி இந்தியன் வங்கி மேலாளருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அந்தக் கட்டடத்தின் மேல் தளத்தில் இயங்கி வந்த இந்தியன் ஓவா்சிஸ் வங்கியையும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக சோ்த்து அடைக்குமாறு அறந்தாங்கி வட்டாட்சியா் எஸ்.ஆா். சிவக்குமாா் உத்தரவிட்டாா். இதையடுத்து, நகராட்சி சாா்பில் வங்கிக் கிளைகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து 2 வங்கிக் கிளைகளும் அடைக்கப்பட்டன. ஏற்கெனவே பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியும் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விராலிமலை: அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் உள்ள கனரா வங்கிக் கிளை கடந்த 16 ஆம் தேதி கரோனா தடுப்பு நடவடிக்கையாக மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வியாழக்கிழமை அங்கு திரண்ட வாடிக்கையாளா்கள் வங்கியைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com