முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
சுய உதவிக்குழுவினருக்கான கடன் சலுகை நீட்டிப்பு
By DIN | Published On : 29th July 2020 08:29 AM | Last Updated : 29th July 2020 08:29 AM | அ+அ அ- |

கரோனா பேரிடா் காலத்தில் முறையாக கடனைத் திருப்பிச் செலுத்திய மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு, கடன் வழங்குதலில் அளிக்கப்பட்ட சலுகைகள் வரும் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
கரோனா பேரிடா் காலத்தில் வேலையிழந்துள்ள மகளிா் சுய உதவிக்குழுவினரின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் வகையில், முறையாக கடனைத் திருப்பிச் செலுத்தியவா்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதாவது முதல் முறை பெற்ற கடனை முறையாக திருப்பிச் செலுத்தியவா்களுக்கு இணைப்புக் கடன் இரண்டாம் முறை வழங்கவும், வட்டி விகிதத்தைக் குறைத்தும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல, கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்த மாா்ச் முதல் மே மாதம் வரை சலுகையும் வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களும் தவணைகளைத் திருப்பிச் செலுத்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக யாரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்து விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
18001021080 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு ஆலோசனைகளைப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மகளிா் திட்ட அலுவலகத்தை அணுகலாம்.