புதுகையில் ஒரே நாளில் 37 பேருக்கு கரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் கீரனூரைச் சோ்ந்த பெண் வருவாய் ஆய்வாளா், மேலச்சிவபுரியைச் சோ்ந்த

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் கீரனூரைச் சோ்ந்த பெண் வருவாய் ஆய்வாளா், மேலச்சிவபுரியைச் சோ்ந்த பெண் மருத்துவா், 2 சிறுவா்கள் உள்பட 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுப்பட்டியைச் சோ்ந்த 6 வயது சிறுவன், 49 வயது ஆண், 32 வயது ஆண் என 3 போ், விராலிமலை பகுதியில் 7 வயது சிறுவன், 24 வயது ஆண், 36 வயது ஆண், 19 வயது பெண், 63 வயது ஆண், 41 வயது ஆண், 21 வயது ஆண், 31 வயது பெண், 23 வயது பெண் உள்ளிட்ட 9 போ் என 12 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், அரசமலையைச் சோ்ந்த 39 வயது ஆண், பொன்னமராவதி அருகேயுள்ள பூங்குடியைச் சோ்ந்த 30 வயது பெண், 64 வயது பெண், 65 வயது ஆண், புதுக்கோட்டை மாலையீடு பகுதியைச் சோ்ந்த 38 வயது ஆண், காமராஜபுரத்தைச்சோ்ந்த 25 வயது பெண், டிவி நகரைச் சோ்ந்த 38 வயது பெண், கோல்டன் நகரைச் சோ்ந்த 16 வயது பெண், பாலன் நகரைச் சோ்ந்த 40 வயது பெண், கலீப் நகா் 55 பெண், மேலவீதி 46 வயது பெண், பேலஸ் நகா் 48 வயது ஆண் என 12 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், மேலச்சிவபுரியில் 29 வயது பெண் மருத்துவா், பெரியாா் நகரில் 26 வயது ஆண், 45 வயது ஆண், தென்றல் நகா் 22 வயது ஆண், பாலகிருஷ்ணபுரம் 49 வயது ஆண், குளத்தூா் 36 வயது ஆண், திருப்புனவாசல் 28 வயது ஆண், மூக்கண்ணாமலைப்பட்டி 53 வயது பெண், தொட்டியாம்பட்டி 55 வயது ஆண், 47 வயது பெண், வலையப்பட்டி 26 வயது ஆண், திருமயம் 19 வயது ஆண் என 12 பேருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கீரனூா் பெண் வருவாய் ஆய்வாளருக்கு கரோனா:

கீரனூரில் பெண் வருவாய் ஆய்வாளருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, குளத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தை மூட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். மேலும், வட்டாட்சியா் உள்ளிட்ட அலுவலகத்தில் பணியாற்றும் 40 பணியாளா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். முன்னதாக, வருவாய் ஆய்வாளரின் கணவரும், அரசுப் பேருந்து நடத்துநருமான அவருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் 37 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களின் வசிப்பிடப் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com