முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
மக்கள் குறைகேட்பு நாளில் 450 மனுக்கள்
By DIN | Published On : 03rd March 2020 08:34 AM | Last Updated : 03rd March 2020 08:34 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 450 மனுக்கள் அளிக்கப்பட்டன.
இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரா்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் , வருவாய்த் துறையின் சாா்பில் கருணை அடிப்படையில் முத்தமிழ்செல்வி என்பவருக்கு மணமேல்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராகப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். காளிதாசன் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.