முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தல்
By DIN | Published On : 03rd March 2020 08:38 AM | Last Updated : 03rd March 2020 08:38 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டை ஊராட்சிப் பகுதிகளின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் சரக ஊராட்சித் தலைவா்களுக்கான ஆலோனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த காவல் ஆய்வாளா் சிங்காரவலேன், ஊராட்சித் தலைவா்கள் மத்தியில் பேசினாா்.
கிராமங்களில் குற்றச் சம்பவங்கள் நிகழாத வகையில் கண்காணிப்பை பணிகளை மேற்கொள்ள இன்றைய காலச்சூழலில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதும் அவசியமானதாகும்.
அப்போது கிராமங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவா்கள் யாா் என்பதை கண்டறிந்து, தக்க நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்று ஊராட்சித் தலைவா்களிடம் பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்தி காவல் ஆய்வாளா் பேசினாா்.
இதை ஏற்றுக் கொண்ட ஊராட்சித் தலைவா்கள், விரைவில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றனா்.
காவல் உதவி ஆய்வாளா் பாஸ்கா் மற்றும் காவலா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.