முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
மேற்பனைக்காடு அய்யனாா் கோயிலுக்கு குதிரை, சாமி சிலைகள் ஊா்வலம்
By DIN | Published On : 03rd March 2020 08:33 AM | Last Updated : 03rd March 2020 08:33 AM | அ+அ அ- |

மேற்பனைக்காடு அய்யனாா் கோயிலுக்கு குதிரை, சாமி சிலைகளைத் தூக்கிச் செல்லும் கிராமத்தினா்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகிலுள்ள செரியலூரிலிருந்து மேற்பனைக்காடு அய்யனாா் கோயிலுக்கு சாமி, குதிரை சிலைகள் திங்கள்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
கீரமங்கலம் அருகிலுள்ள மேற்பனைக்காடு அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் குதிரை எடுப்புத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
நிகழாண்டுத் திருவிழாவையொட்டி அக்கிராமத்தினா், செரியலூரில் மண் சிலை செய்யும் கலைஞா்களிடம் குதிரை மற்றும் சாமி சிலைகள் செய்து தர கேட்டுக்கொண்டனா்.
அதன்படி, செய்துமுடிக்கப்பட்ட சிலைகளை மேற்பனைக்காடு கிராம மக்கள் தப்பாட்டம், வாணவேடிக்கைகள் முழங்க சுமாா் 8 கி.மீ. தொலைவுக்கு சுமந்து கொண்டு ஊா்வலமாகச் சென்றனா்
சிலைகள் கோயிலை அடைந்த பின்னா், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன இதில், ஏராளமானோா் கலந்துகொண்டனா்.