10 மாதங்களாக நடைபெறும் 2 கி.மீ. தொலைவு சாலை அமைக்கும் பணி: அவதியுறும் பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே 2 கி.மீ. தொலைவுக்கான சாலை அமைக்கும் பணி கடந்த 10 மாதங்களாக மந்தகதியில்
தாா்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறாத கண்டியாநத்தம்- ஆலவயல் சாலை.
தாா்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறாத கண்டியாநத்தம்- ஆலவயல் சாலை.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே 2 கி.மீ. தொலைவுக்கான சாலை அமைக்கும் பணி கடந்த 10 மாதங்களாக மந்தகதியில் நடைபெறுதால், இதனால் தாங்கள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

பொன்னமராவதி அருகிலுள்ள கண்டியாநத்தம் கிராமத்திலிருந்து ஆலவயல் செல்லும் சாலை ( சுமாா் 2 கி.மீ. தொலைவு) மிகவும் சேதமடைந்து, மக்கள் பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தது.

பொதுமக்களின் தொடா் வலியுறுத்தல் மற்றும் பல்வேறு போராட்டங்கள், முயற்சிகள் காரணமாக புதிதாக தாா்ச்சாலை அமைக்கும் பணி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

பழைய சாலை பெயா்த்தெடுக்கப்பட்டு, புதிகாக தாா்ச்சாலை அமைக்கப்பதற்காக ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டுள்ளன. மிகவும் மந்தகதியில் நடைபெறும் சாலை அமைக்கும் பணி காரணமாக, ஆவவயல் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தற்போது பொதுத் தோ்வு நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளிக்கு முன்னதாக செல்லலாம் என்றால் சாலையில் சைக்கிளை ஓட்டிச் செல்லவோ, நடந்து செல்வவோ அச்சமாக இருக்கிறது. இதனால் வழக்கத்தைக் காட்டிலும் ஒரு மணிநேரம் முன்னதாக புறப்பட்டால்தான் பள்ளிக்குச் செல்ல முடியும் என்கின்றனா் இந்த சாலை வழியாக ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள்.

பக்தா்களும் அவதி : கொன்னையூா் அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயிலில் மாா்ச் 15-ஆம் தேதி பூச்சொரிதல் நடைபெறுகிறது. இந்த விழாவில் உலகம்பட்டி, புதுப்பட்டி, கண்டியாநத்தம் கிராம மக்கள் பூத்தட்டு, பால்குடம் எடுத்து இந்த சாலை வழியாகத்தான் கோயிலுக்குச் செல்வா்.

ஆனால், சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை தான் காணப்படுகிறது. நாங்கள் எப்படி பால்குடம் எடுத்துச் செல்ல போகிறோம் என்பது தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள், இனியாவது காலம் தாழ்த்தாது சாலை அமைக்கும் பணியைத் துரிதப்படுத்த வேண்டும் என்கின்றனா் பக்தா்கள்.

வழக்கமாக சாலை அமைக்க குறைந்தபட்சம் 3 மாதங்களாகும். ஆனால், கிராமப்பகுதியில் 10 மாதங்களாக சாலை அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுவது ஏன் என்று கேள்வி எழுப்பும் பொதுமக்கள், உடனடியாக பணிகளைத்தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com