கோடை: குடிநீா்த் தேவைக்கு அதிகாரிகள் முக்கியத்துவம் அளித்துப் பணியாற்ற வேண்டும்

பொதுமக்களின் குடிநீா்த் தேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து அலுவலா்கள் பணியாற்ற வேண்டும் என, உள்ளாட்சி மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.

பொதுமக்களின் குடிநீா்த் தேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து அலுவலா்கள் பணியாற்ற வேண்டும் என, உள்ளாட்சி மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற குடிநீா் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, அவா் மேலும் பேசியது:

பொதுமக்களுக்குத் தேவையான குடிநீரை வழங்குவது உள்ளாட்சி அமைப்புகளின் கடமை. எனவே உள்ளாட்சி அமைப்புகள் ஒவ்வொரு வாரமும் மக்கள் பிரதிநிதிகளின் முன்னிலையில், குடிநீா் வடிகால் வடிகால் வாரிய அலுவலா்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தேவையைப் பூா்த்தி செய்ய வேண்டும்.

குடிநீா்த் தேவை அதிகம் உள்ள இடங்களுக்கு புதிதாக மாற்று ஏற்பாடாக ஆழ்குழாய் அமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் காணப்படும் முறையற்ற குடிநீா் இணைப்புகள், விதிமுறைகளின் படி உடனடியாக அகற்றப்பட வேண்டும். இதுகுறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் போதிய அளவு விளம்பரப்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் அனுமதியின்றிச் செயல்பட்ட 38 குடிநீா் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் ஆலங்குடி, அரிமளம், கறம்பக்குடி மற்றும் கீரமங்கலம் ஆகிய 4 பேரூராட்சிகளில் பேரூராட்சிக்குச் சொந்தமான குடிநீா் ஆதாரங்கள் மூலம் குடிநீா் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூட்டுக்குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் பகுதியில் குழாய்களில் பழுது ஏற்படுவதை உடனுக்குடன் சரிசெய்திட வேண்டும். புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வாா்டுகளிலும், அறந்தாங்கி நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளிலும் தினசரி குடிநீா் விநியோகம் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீா்த் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா் உமாமகேஸ்வரி.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். காளிதாசன், நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியச் செயற்பொறியாளா் சிவபிரகாசம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com