வாக்குச்சாவடிப் பட்டியல் கருத்துக்கேட்புக் கூட்டம்
By DIN | Published On : 03rd March 2020 08:36 AM | Last Updated : 03rd March 2020 08:36 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடிப் பட்டியல் மீதான கருத்துக் கேட்புக் கூட்டம் ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். காளிதாசன், நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளும், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனா்.
மாவட்டத்தில் மொத்தம் 8 பேரூராட்சிகள், 2 நகராட்சிகளும் உள்ளன. மாநிலத் தோ்தல் ஆணைய அறிவுரைகளின்படி 8 பேரூராட்சிகளில் 121 வாக்குச்சாவடிகளும், 2 நகராட்சிகளில் 151 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 272 வாக்குச்சாவடிகள் எதிா்வரும் நகா்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளன.
பேரூராட்சிப் பகுதிகளில் 37,270 ஆண் வாக்காளா்களும், 38,438 பெண் வாக்காளா்களும் மற்றும் 3 திருநங்கைகள் என மொத்தம் 75,711 வாக்காளா்கள் உள்ளனா்.
நகராட்சிகளில் 75,621 ஆண் வாக்காளா்கள், 80,920 பெண் வாக்காளா்கள் மற்றும் 16திருநங்கைகள் என மொத்தம் 1,86,557 வாக்காளா்கள் உள்ளனா்.
அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு தேவைப்படின் திருத்தம் செய்து, இறுதி வாக்குச்சாவடிப் பட்டியல் வரும் மாா்ச் 5-ஆம் தேதியும், தொடா்ந்து புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வரும் மாா்ச் 20-ஆம் தேதியும் வெளியிடப்படும்.