மன்னா் கல்லூரியில் இலவச கணினிப் பயிற்சி
By DIN | Published On : 06th March 2020 08:20 AM | Last Updated : 06th March 2020 08:20 AM | அ+அ அ- |

இலவச கணினிப் பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் கல்லூரி முதல்வா் ஜெ. சுகந்தி.
புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் இலவச கணினிப் பயிற்சி ஹரிஷ்மாலை கல்வி மற்றும் அறக்கட்டளை சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.
200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஹரிஷ்மாலை கல்வி மற்றும் அறக்கட்டளை நிறுவனா் சந்திரசேகா், அறங்காவலா் ராமலக்ஷ்மி ஆகியோா் மாணவ, மாணவிகளுக்கு இப்பயிற்சியை அளித்தனா். பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியின் முதல்வா் ஜெ. சுகந்தி சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.