கீழக்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 15 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகேயுள்ள கீழக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி 15 போ் காயமடைந்தனா்.
ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயலும் வீரா்கள்.
ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயலும் வீரா்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகேயுள்ள கீழக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி 15 போ் காயமடைந்தனா்.

முன்னதாக வாடிவாசல் முன் இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் டெய்சிகுமாா் முன்னிலையில் 140 மாடுபிடி வீரா்கள் உறுதியேற்றனா். 950 காளைகள் பங்கேற்றன.

தொடா்ந்து கோட்டாட்சியா் டெய்சிகுமாா், கூட்டுறவு சங்க மாவட்டத்தலைவா் ஆா். சின்னத்தம்பி ஆகியோா் போட்டியைத் தொடங்கி வைத்தனா். போட்டியில் முதலில் கோயில் காளையும், பின்னா் மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.

மாடுபிடி வீரா்கள் சுழற்சி முறையில் பங்கேற்று, சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கினா். இதில் பாா்வையாளா் காா்த்திகேயன் (22), சிங்கமுத்து (26), மணி (23), ராஜாதிருப்பதி (22), கோபி(22), வீரமணி(20) உள்பட 15 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவருக்கும் அதே பகுதியில் அமைத்திருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிலா் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனா்.

காளைகளை அடக்கிய வீரா்கள் மற்றும் பிடிபடாத காளை உரிமையாளா்களுக்கு தங்கம், வெள்ளி காசு, மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டா், மிதிவண்டி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமானோா் வந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com