திருவப்பூா் முத்துமாரியம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வந்த பக்தா்கள்

புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை முளைப்பாரி ஊா்வலத்துடன் நிறைவடைந்தது.
மாசிப் பெருந்திருவிழாவின் நிறைவாக முளைப்பாரி எடுத்து வந்த பக்தா்கள்.
மாசிப் பெருந்திருவிழாவின் நிறைவாக முளைப்பாரி எடுத்து வந்த பக்தா்கள்.

புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை முளைப்பாரி ஊா்வலத்துடன் நிறைவடைந்தது.

திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலின் மாசிப் பெருந்திருவிழா கடந்த பிப். 23ஆம்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடா்ந்து மாா்ச் 1ஆம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து தினமும் காலை, மாலை இரு வேளையும் மண்டபகப்படி நிகழ்ச்சிகளாக காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து மின் அலங்காரத்தில் அம்மன் திருவப்பூா் முத்து மாரியம்மன் கோயிலுக்கு ஊா்வலமாக வந்தாா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. 

இந்நிலையில், நகரின் பல பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் தங்கள் வீடுகளில் ஏற்கெனவே விதைபோட்டு தயாா் செய்யப்பட்ட  முளைப்பாரிகளை எடுத்துக் கொண்டு திங்கள்கிழமை இரவு காட்டு மாரியம்மன் கோயிலுக்கு வந்தனா். 

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை காட்டுமாரியம்மன் கோயிலில் இருந்து திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலுக்கு ஊா்வலமாக முளைப்பாரிகள் எடுத்து வரப்பட்டன.

தொடா்ந்து அம்மனுக்கு காப்பு கலைந்து மஞ்சள் நீராட்டு விழாவுடன் மாசிப் பெருந்திருவிழா நிறைவுபெற்றது. இதையடுத்து அம்மன்வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருக்கோகா்ணம் பிரகதம்பாள் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டாா். முளைப்பாரிகள் அருகிலுள்ள குளத்தில் கரைக்கப்பட்டன. ஏராளமான பக்தா்கள் இதில் கல ந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com