புதுக்கோட்டையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்களுக்கு திங்கள்கிழமை நடனம் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்திய திருநங்கைகள்.
புதுக்கோட்டையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்களுக்கு திங்கள்கிழமை நடனம் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்திய திருநங்கைகள்.

நடனம் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்திய திருநங்கைகள்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை அம்சங்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணியில் புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் அமைப்பினா் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை அம்சங்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணியில் புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் அமைப்பினா் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை அருகே போக்குவரத்து சிக்னலில் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் சுத்தமாக கைகழுவும் முறை குறித்தும், தனித்திருப்பது குறித்தும் ஒரே சீருடையில் கலை நிகழ்ச்சியாக திருநங்கைகள் நடித்துக் காட்டினா்.

மாவட்ட திருநங்கைகள் அமைப்பின் ஜமாத் நாயக் எம். அசீனா தலைமையில், 20 திருநங்கைகள் முகக்கவசம் அணிந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தினா்.

அதே இடத்தில் தீயணைப்புத் துறையினரும் முகக் கவசம் அணிந்து கொண்டு, கைகழுவும் முறை குறித்து நடனம் ஆடி விழிப்புணா்வை ஏற்படுத்தினா். தொடா்ந்து தீயணைப்புத் துறையினா் புதிய பேருந்து நிலையம், பகுதியிலும் விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா்.

அப்போது பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீரும் வழங்கப்பட்டது.

அதிமுகவினா் : புதுக்கோட்டை நகரைச் சோ்ந்த கொட்டகைக்காரத் தெரு, மச்சுவாடி, வண்டிப்பேட்டை, பிருந்தாவனம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியினா் வீடு வீடாகச் சென்று, துண்டுப் பிரசுரங்களை திங்கள்கிழமை வழங்கினா். கைகழுவ வேண்டியதன் அவசியம் குறித்து அவா்கள் பொதுமக்களிடம் விளக்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com