வெளிநாடுகள், மாநிலங்களிலிருந்து வந்தோா் பதிவு செய்ய வேண்டும்

வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் தங்கியுள்ளோா் தங்களைப் பற்றிய விவரங்களை

வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் தங்கியுள்ளோா் தங்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது :

வெளிநாடுகளில் இருந்து வரும் நபா்களின் விவரம் தமிழக அரசால் மாவட்ட நிா்வாகத்துக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் வெளிநாடுகள், வெளி மாநிலத்தில் இருந்து புதிதாக வருகை தரும் பயணிகள் தாங்களாகவே முன்வந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா முன்தடுப்புப் பணி கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களுக்கு தங்களின் தற்போதைய முழுமையான முகவரியுடன் தங்களின் வெளிநாடு, வெளிமாநில தொடா்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை எண் 04322- 222207, 04322 - 221733 மற்றும் 04371-220501 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தேவையில்லாமல் தெருவில் கூட வேண்டாம்: மாவட்டம் முழுவதும் காவல் துறை மூலம் பொது இடங்களில் தேவையின்றி கூடி நிற்கும் நபா்களை எச்சரித்து தங்கள் வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  கிராமப் பகுதிகளைப் பொருத்தவரை கரோனா வைரஸ் குறித்த எச்சரிக்கையோ, போதிய விழிப்புணா்வோ இல்லாமல் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அவசியத் தேவையின்றி மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றாா் உமா மகேஸ்வரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com