புதுகையில் ஜெட் ராடா் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

புதுக்கோட்டை நகராட்சி சாா்பில் நகா் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஜெட் ராடா் இயந்திரம் மூலம் கிருமி நாசினியைப் பீய்ச்சி அடித்து சுகாதாரப் பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன.
புதுக்கோட்டை உழவா் சந்தைப் பகுதியில் தெருவிலும் வாகனங்கள் மீதும் ஜெட் ராடா் மூலம் கிருமி நாசினியைத் தெளிக்கும் நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணி கடந்த ஒரு வாரகாலமாக புதுக்கோட்டை நகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலா ரூ. 14 ஆயிரம் மதிப்பில் 10 சிறு தெளிப்பான்கள் வாங்கப்பட்டு, இரண்டரை சதவிகிதம் லைசால் கலந்த கிருமி நாசனி தெளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கிருமி நாசினி தெளிக்கும் பணியைத் தீவிரப்படுத்தும் வகையில் ரூ. 14 லட்சம் மதிப்பில் புதை சாக்கடையில் அடைப்பு ஏற்படும்போது அடைப்பு நீக்கும் ஜெட் ராடா் இயந்திரத்தைக் கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி புதன்கிழமை முதல் தொடங்கியது.

உழவா் சந்தைப் பகுதியில் தெருக்களிலும், ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களிலும் கிருமிநாசினி நீண்ட தொலைவுக்கு அடித்து தெளிக்கப்பட்டது.

ஏற்கெனவே, 6 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தண்ணீா் லாரியில் தண்ணீா் நிரப்பி பிளீச்சிங் பவுடா் கலந்து பெரிய - சிறிய அனைத்து வீதிகளையும் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com