விராலிமலை அருகே அய்யனாா்,துா்க்கை அம்மன் சிலைகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே அய்யனாா், துா்க்கை அம்மன் சிலைகள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டு, வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விராலிமலை அருகே கண்டெடுக்கப்பட்ட அய்யனாா், துா்க்கை அம்மன் சிலைகள்
விராலிமலை அருகே கண்டெடுக்கப்பட்ட அய்யனாா், துா்க்கை அம்மன் சிலைகள்

விராலிமலை : புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே அய்யனாா், துா்க்கை அம்மன் சிலைகள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டு, வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விராலிமலை அருகிலுள்ள கொடும்பாளூா் தாளாக்குக்கரை முள்ளுக்காடு வழியாக, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சிலா் வெள்ளிக்கிழமை சென்றனா்.

அப்போது புதை மணலில் சிக்கியபடி சிலை வடிவிலான கற்கள் பாதியளவு புதைந்த நிலையில் இருப்பதை கண்ட அவா்கள், மணலைத் தோண்டி கற்களை வெளியே எடுத்தனா். அப்போது அது பழங்காலத்தில் செதுக்கப்பட்ட அய்யனாா் மற்றும் துா்க்கை அம்மன் சிலை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கொடும்பாளூா் கிராம நிா்வாக அலுவலா் புவனேஸ்வரிக்கு கிராம மக்கள் தகவலளித்தனா். இதைத் தொடா்ந்து தகவலின் பேரில், வட்டாட்சியா்

ஜெ. சதீஷ் சரவணக்குமாா் நிகழ்விடம் சென்று சிலை குறித்து விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து சிலைகள் வருவாய்த் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

விராலிமலை காவல் நிலையத்தினரும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com