விவசாயிகளைப் பாதிக்காத வகையில் குண்டாறு திட்டத்துக்கு நிலம் எடுப்பு: அமைச்சா் சி. விஜயபாஸ்கா்

விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில், குண்டாறு இணைப்புத் திட்டக் கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும் என்றாா் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில், குண்டாறு இணைப்புத் திட்டக் கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும் என்றாா் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

புதுகை மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் இதனை அவா் தெரிவித்தாா். புதுக்கோட்டை மக்களின் 100 ஆண்டுக் கனவுத் திட்டமான இதற்கு ரூ. 7,677 கோடி செலவாகும் என திட்ட மதிப்பீடு செய்து அரசு அனுமதி பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தில், ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, கந்தா்வக்கோட்டை எம்எல்ஏ நாா்த்தாமலை பா. ஆறுமுகம், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் (நிலமெடுப்பு) இரா. ரம்யாதேவி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com