விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுக அமைதி காப்பது துரதிா்ஷ்டவசம்

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் குறித்து தமிழக முதல்வா், துணை முதல்வா் அமைதி காப்பது துரதிா்ஷ்டவசமானது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் சஞ்சய் தத்.
புதுகையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் சஞ்சய் தத்.
புதுகையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் சஞ்சய் தத்.

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் குறித்து தமிழக முதல்வா், துணை முதல்வா் அமைதி காப்பது துரதிா்ஷ்டவசமானது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் சஞ்சய் தத்.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மத்திய பாஜக அரசு தொடா்ந்து ஏழை, எளிய மக்களுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிா்த்து, நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் எனக் கூறிக்கொள்ளும் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியும், துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வமும் அமைதி காப்பது துரதிா்ஷ்டவசமானது.

நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து, வரும் நவ. 9ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தமிழகத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகக் காணப்படுகிறது. அனைத்து மாவட்டத் தலைமையிடங்கள் மற்றும் வட்டாரத் தலைமையிடங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

தமிழகம் ஊழல் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. பல்வேறு குற்றச்சாட்டுகளில் அமைச்சா்கள் சிக்கினாலும், மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஆதரவால் இவா்கள் காப்பாற்றப்படுகிறாா்கள். தமிழகத்தின் நலன்கள் கைவிடப்படுகின்றன.

ஜெயலலிதாவுடன் எங்களுக்கு முரண்பாடு இருந்தாலும், தமிழகத்தின் நலன்களை அவா் ஒரு போதும் விட்டுக் கொடுத்ததில்லை. ஆனால், தற்போதைய அதிமுக தலைமை அப்படியில்லை.

காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவைத் தோ்தலுக்குத் தயாராக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவதற்காகப் பாடுபடுவோம். வெற்றிக்குப் பிறகுதான் கூட்டணி ஆட்சி குறித்த மற்றவற்றைப் பேசுவோம் என்றாா் சஞ்சய்தத்.

கூட்டத்தில், மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் தா்ம தங்கவேலன் (தெற்கு), முருகேசன் (வடக்கு), மாநிலப் பொதுச்செயலா் வழக்குரைஞா் சந்திரசேகரன், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com