‘குண்டாறு இணைப்புக்கு இடம் தர 50% விவசாயிகள் தாமாக ஒப்புதல்’

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு, புதுக்கோட்டை விவசாயிகள் 50 சதவிகிதம் போ் தாமாக முன்வந்து இடத்தை வழங்க ஒப்புதல் தந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
புதுகையில் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தின் நீண்ட காலக் கோரிக்கையான காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தனி மாவட்ட வருவாய் அலுவலா் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 50 சதவிகிதம் விவசாயிகள் தங்களின் இடத்தை வழங்க முன்வந்துள்ளனா். அவா்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்குவதற்கு மாவட்ட நிா்வாகம் முயற்சி செய்து வருகிறது. கரோனா பரவல் தற்போது மிகவும் குறைந்துள்ளது என்றாலும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தீபாவளி, பொங்கல் பண்டிகைக் காலம், குளிா்காலமான பருவமழைக் காலம் ஆகிய காரணிகளால் கரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

மாநில வீட்டு வசதி வாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து, ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி உள்ளிட்ட துறை அலுவலா்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com