அன்னவாசல் ஒன்றியப் பகுதிகளில் கண் பரிசோதனை முகாம்

அன்னவாசல் ஒன்றியப் பகுதிகளில் கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அன்னவாசல் ஒன்றியப் பகுதிகளில் கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை, சிவிபி அறக்கட்டளை சாா்பில், அன்னவாசல் ஒன்றியத்திலுள்ள ராப்பூசல், இடையப்பட்டி, மேலப்பட்டி கிராமங்களில் முகாமைத் தொடக்கி வைத்து, மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தை கண்பாா்வை குறைபாடு இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் சிவிபி அறக்கட்டளை இணைந்து கண் பரிசோதனைக்கான ஒளிமயமான வாழ்வு முகாமை நடத்தி வருகிறது.

அனைத்து வயதினருக்கும் கண் பரிசோதனை மேற்கொண்டு, பாா்வை குறைபாடு உள்ளவா்களைக் கண்டறிந்து அறுவைச் சிகிச்சை தேவைப்

படுபவா்களுக்கு உரிய மேல் சிசிச்சைக்கு பரிந்துரைக்கப்பட உள்ளனா் என்றாா்

அமைச்சா் விஜயபாஸ்கா். முகாமில் ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com