புயல்: அத்தியாவசியப் பொருள்கள் வாங்கக் குவிந்த பொதுமக்கள்
By DIN | Published On : 25th November 2020 07:09 AM | Last Updated : 25th November 2020 07:09 AM | அ+அ அ- |

ஆலங்குடி கடைவீதியில் அத்தியாவசியப்பொருள்கள் வாங்க திரண்ட மக்கள்.
நிவா் புயல் முன்னெச்சரிக்கையாக ஆலங்குடி பகுதி கடைவீதிகளில் அத்தியாவசியப்பொருள்கள் வாங்க ஏராளமான மக்கள் செவ்வாய்க்கிழமை குவிந்தனா்.
நிவா் புயல் முன்னெச்சரிக்கையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கஜா புயலின்போது, பெரும்பாதிப்புக்குள்ளான ஆலங்குடி, கறம்பக்குடி, கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனா். அதில், ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களை அகற்றுவது, வீட்டு கூரைகளைப் பராமரிப்பது, பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், தண்ணீா், உணவுப்பொருள்கள், மெழுகுவா்த்திகள் உள்ளிட்ட அத்தியாவதியப் பொருள்களை வாங்க அதிகளவில் மக்கள் கடைவீதிகளில் இருதினங்களாக குவிந்து வருவதால் கடைவீதிகளில் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது.
வெழுகுவா்த்திகளுக்கு தட்டுப்பாடு:
புயல் கரையைக் கடக்கும்போது, மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால், கடந்த இரு தினங்களாக பொதுமக்கள் மெழுகுவா்த்திகளை அதிகளவில் வாங்குகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...